ETV Bharat / business

Dell Technologies : ஆட்குறைப்பு நடவடிக்கையில் Dell நிறுவனம்- காரணம் என்ன?

Dell Technologies : பிரபல Dell நிறுவனம் தங்களின் விற்பனை குழு ஊழியர்களில் சிலரைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 8, 2023, 1:21 PM IST

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் Dell நிறுவனம் உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த செய்தி அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கணினி மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, விநியோகம், பழுது பார்ப்பது உள்ளிட்ட சேவைகளை உலக அளவில் வழங்கி வருகிறது Dell நிறுவனம்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ள Dell நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தனது ஊழியர்களில் 6 ஆயிரத்து 650 பேரைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. கடந்த கரோனா காலகட்டத்திற்குப் பிறகு தனி நபர் கணினிகளுக்கான தேவை குறைந்து இருப்பதாகவும், இதனால் வர்த்தக ரீதியாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் டெல் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் கிளார்க் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தங்கள் விற்பனை குழு ஊழியர்களில் பலரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக Dell நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட 6 ஆயிரத்து 650 பேர் பணி நீக்க நடவடிக்கையின் கீழ் வருமா? இதில் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்ற முழுமையான தகவல் வெளியாகவில்லை.

குறிப்பாக Dell நிறுவனம் தங்களுக்கான விற்பனை குழு ஊழியர்களை நியமித்து உள்ள நிலையில், நிர்வாக ரீதியாக முக்கிய திட்டங்களை வகிக்கும் விற்பனை குழுவில் உள்ள சில பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளதாக CRN அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது குறித்து தகவல் அளித்துள்ள Dell நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், தங்கள் ஊழியர்கள் பலர் வேலையை விட்டு வெளியேறி வரும் நிலையில் அவர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க மாட்டோம் எனவும் அவர்களுக்கு வேறு ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ஆதரவாக Dell நிறுவனம் இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் மற்ற நிறுவனங்களுடன் Dell போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வருகிறது எனவும், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களைத் தொடர்ந்து மதிப்பிட்டு அவர்களையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அறிவித்த 6 ஆயிரத்து 650 பேர் பணி நீக்க நடவடிக்கையில் 5 சதவீதம் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் Dell வருமான ரீதியாக முன்னேற்றத்தைக் கண்டு அடுத்தகட்ட இலக்கை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த வாரம் டெல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷக் விட்டன் திடீரென ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: மெட்டா சிஇஒ மார்க் ஜுக்கர்போர்க் பயன்படுத்தும் செல்போன் இதுவா? இணையத்தை கலக்கும் செல்போனின் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.