அமெரிக்க பங்குச்சந்தைகளில் நடந்த அதகளம், சிறகை விரித்த சிங்கப்பூர் நிஃப்டி, அள்ளிக்கொடுத்த ஐரோப்பியச் சந்தைகள் இவற்றின் தாக்கம் இந்திய சந்தைகளுக்கு இனிப்பை தந்தன. ஆரம்பம் முதலே இறக்கை கட்டி பறக்க ஐந்து மாநிலத் தேர்தல்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியன முக்கிய காரணிகளாக அமைந்தன.
ஐந்து மாநில தேர்தல்
பஞ்சாப் நீங்கலாக, உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்ரகாண்ட் ஆகிய இடங்களில் ருத்ர தாண்டவம் ஆடி ஆட்சியைப்பிடித்தது பாஜக என்ற தகவலும் ஒரு சேர, மேலே மேலே செல்ல ஆரம்பித்தன, இந்திய சந்தைகள்.
பிஎஸ்இ தலைவர் ஆஷிஷ் சௌஹான் என்எஸ்இயில் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வந்தவண்ணம் உள்ளன. 1992 முதல் 2000 வரை எக்ஸ்சேஞ்சில் பணிபுரிந்த சௌஹான் (National Stock Exchange of India Ltd) என்எஸ்இயின் நிறுவனர்களில் ஒருவர். அவர் 2009இல் பிஎஸ்இயில் துணை தலைமை நிர்வாக அலுவலராகச் சேர்ந்து பின், 2012இல் தலைமை நிர்வாக அலுவலராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்திய வர்த்தகம்
பொங்கி எழும் பணவீக்கம் ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான இந்தியாவின் வர்த்தகம் சிறியதாக இருந்தாலும், சூரியகாந்தி எண்ணெய், சில உரங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றில் அதன் சார்பு கணிசமானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, துருக்கியின் தெற்கு மாகாணமான அன்டலியாவில் ரஷ்யப் பிரதிநிதி செர்ஜி லாவ்ரோவுடனான சந்திப்பு, போர்நிறுத்த ஒப்பந்தம் அல்லது பிற முடிவுகளுக்கான எதிர்பார்ப்புகளைத் தணித்துள்ளார்கள் என்ற தகவலும் வந்தது.
பங்குச் சந்தை
இந்தியப் பங்குச் சந்தையானது, அரசியல் பதற்றங்கள் வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட 357.05 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்தது. அதே நேரத்தில், பிரிட்டிஷ் சந்தைகள் 410 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்தன என்ற தகவல்களால் சந்தைகள் உச்சத்திலேயே இருந்தன.
வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 817 புள்ளிகளும் நிஃப்டி 250 புள்ளிகளும் உயர்ந்து வியாழக்கிழமை வர்த்தகத்தை நிறைவு செய்தன. பெரும்பாலான பங்குகள் நன்றாகவே பரிணமித்தன. வெள்ளி அள்ளித்தருமா காத்திருப்போம்!
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் பங்குனித் தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலம்