மும்பை: புது வருட பிறப்பின் முதல் நாளில் உயர்வுடன் இந்தியப் பங்குச் சந்தை தனது வர்த்தகத்தைத் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119.98 புள்ளிகள் உயர்வுடன் 47,871.31ஆக வர்த்தகமானது. இதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38.60 புள்ளிகள் உயர்வைக் கண்டு 14,020.35ஆக இருந்தது.
முக்கியமாக மஹிந்திரா & மஹிந்திரா பங்கின் விலை 2.3% உயர்வை சந்தித்திருந்தது. முறையே ஸ்டேட் வங்கி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், எல்&டி, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளும் உயர்வைச் சந்தித்திருந்தது.
பெருமளவிலான முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் டைடான் கம்பெனி, ஐசிஐசிஐ வங்கி, சன் ஃபார்மா ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தது.