ETV Bharat / business

கடும் சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள்

மும்பை: கொரோனா, கச்ச எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

Stock market update today
Stock market update today
author img

By

Published : Mar 9, 2020, 9:51 AM IST

யெஸ் வங்கி விவகாரத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த வாரம் பெரும் சரிவை சந்தித்தன. கடந்த வார சரிவிலிருந்து இந்த வாரம் பங்குச் சந்தைகள் மீளும் என்று முதலீட்டாளர்கள் நம்பியிருந்த நிலையில், மீண்டும் பெரும் சரிவுடனேயே பங்குச்சந்தைகள் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 1,447 புள்ளிகள் குறைந்து 36,129 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 377 புள்ளிகள் குறைந்து 10,611 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.

யெஸ் வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள், கொரோனா வைரஸ் குறித்து மக்களின் அச்சம், கச்ச எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றின் எதிரொலியாகப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.

இதையும் படிங்க: இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.