கடந்த இரு நாட்களாக வீழ்ச்சி கண்ட பங்குச்சந்தைகளில் இன்று சற்று எழுச்சி காணப்பட்டது. நிபுணர்கள் நல்ல பங்குகளில் சிறுக சிறுக தொடர்ந்து முதலீடு செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியாவில் கரோனா தொற்று மெல்ல மெல்ல குறையத்தொடங்கி இருக்கிறது. இவை நல்ல விஷயங்களாகப் பார்க்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அனைத்து துறை குறியீடுகளும் பரிணமிக்கத் தொடங்கின. நேற்று இழந்த புள்ளிகளை மீட்டு எடுத்ததற்கு முக்கியக் காரணியாக அமைந்தது, ஃபெடரல் ரிசர்வ் வங்கி கொள்கைக்கான அறிவிப்பு எதிர்பார்ப்புதான்.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 1,040 புள்ளிகளும், நிஃப்டி 312 புள்ளிகளும் உயர்ந்து முடிந்தன. அல்ட்ரா டெக் சிமென்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஸ்ரீசிமெண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் ஆகியன நல்ல லாபத்தை கொடுத்து வர்த்தகத்தை நிறைவு செய்தது. கச்சா எண்ணெய் விலையும் தங்கத்தின் விலையும் சற்றே குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் கொடுமை: ஆதரவாற்றவர்களான 4000-க்கும் மேலான குழந்தைகள்