ETV Bharat / business

பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் எதிரொலி - உயரும் இந்திய பங்குச் சந்தை!

மும்பை: இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியதைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை இன்றும் ஏற்றம் கண்டது.

Indian Stock market
Indian Stock market
author img

By

Published : May 13, 2020, 11:28 AM IST

Updated : May 13, 2020, 11:55 AM IST

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாள்களாகவே சரிவைச் சந்தித்துவந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை இன்று காலை முதலே ஏற்றம் கண்டு வர்த்தகமாகிவருகிறது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 1,400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. தற்போது சென்செக்ஸ் 798.17 புள்ளிகள் உயர்ந்து 32,169.29 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 229.30 புள்ளிகள் உயர்ந்து 9,425.85 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.

ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குகள் ஏழு விழுக்காட்டிற்கும் மேல் உயர்வைக் கண்டது. அதேபோல எல் & டி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், எம் அண்ட் எம், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றமடைந்தன. மறுபுறம், நெஸ்லே இந்தியா, பாரதி ஏர்டெல், சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிவைச் சந்தித்தன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1,662.03 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றனர்.

காரணம் என்ன?

இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 விழுக்காடு, அதாவது 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். மேலும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்பே இந்திய பங்குச் சந்தை உயரக் காரணமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச பங்குச் சந்தை

ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் நள்ளிரவு வர்த்தகமும் இறங்கு முகத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.53 விழுக்காடு குறைந்து பேரல் ஒன்று 29.52 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.

இதையும் படிங்க: ரூ.20 லட்சம் பொருளாதார திட்டங்கள் மாலை 4 மணிக்கு அறிவிப்பு

Last Updated : May 13, 2020, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.