ETV Bharat / business

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் தொடக்க நாளான இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

Sensex today  Market today  Stock market today  market closing session  இந்திய பங்குச் சந்தைகள்  மும்பை பங்குச் சந்தை  தேசிய பங்குச் சந்தை  Sensex  IT stocks

author img

By

Published : Jan 25, 2021, 5:13 PM IST

மும்பை: திங்கள்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ 531 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 258 புள்ளிகளும் வீழ்ந்தன.

வாரத்தின் முதல் நாளான இன்று முதலீட்டாளர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தை தொடங்கின. முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 530.95 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 48,348 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிஃப்டியை பொறுத்தவரை 133 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிகப்பட்சமாக 5.36 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. தொடர்ச்சியாக இண்ட்இந்த் வங்கி, ஹெச்.சி.எல் டெக், ஆசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் பவர் கிரீட் நிறுவன பங்குகள் 4.72 வரை வீழ்ச்சியடைந்தன.

மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்சர்வ், ஹெச.டி.எஃப். சி மற்றும் டாக்டர். ரெட்டிஸ் பங்குகள் லாபகரமாக வர்த்தகமாகின. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியை பொருத்தவரை ரிலையன்ஸ், இண்ட்இந்த் வங்கி, ஹெச்.சி.எல் டெக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்திலும், கிராஸிம், யூபிஎல், சிப்லா, ஹீரோ மோட்டார்கார்ப், ஆஸியன் வங்கி உள்ளிட்ட பங்குகள் லாபத்திலும் வணிகமாகின.

நாளை (ஜன.26) குடியரசுத் தினம் என்பதால் இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.

இதையும் படிங்க : 6ஆவது நாளாக ஏற்றம் கண்ட சந்தை; புதிய உச்சத்தில் சென்செக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.