பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் கம்பெனி, பவர் கிரிட், என்.டி.பி.சி, ஐ.டி.சி போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஹீரோ மோட்டார்கார்ப், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், பி.பி.சி.எல், டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 58.81 புள்ளிகள் அதிகரித்து 37,871.52 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 29.65 புள்ளிகள் குறைந்து 11,132.60 புள்ளிகளில் நிறைவுற்றது.
தனிநபர் கடனா / தங்க நகைக்கடனா... சிறந்த கடன் திட்டம் எது?
ரூபாயின் மதிப்பு
நேற்று ரூ.74.75 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு பைசா குறைந்து ரூ.74.76 காசுகளாக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை
பொருள் வணிகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 34 புள்ளிகளை இழந்து 3090 ரூபாயாக இருந்தது.