மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (மே.17) சுமார் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்வைச் சந்தித்தது. இன்றைய வர்த்தகநாள் முடிவில் சென்செக்ஸ் 612.60 புள்ளிகள் (1.24 விழுக்காடு) உயர்ந்து 50.193.33 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 184.95 (1.24 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,108.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
கடந்த சில நாள்களாக கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை மெல்ல குறையத் தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, எம் & எம், பஜாஜ் ஆட்டோ, டைட்டான், பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. அதேவேளை பாரதி ஏர்டெல், ஐடிசி, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: நாடு முழுவதும் கோவிட் இரண்டாம் அலையில் 270 மருத்துவர்கள் பலி