வாரத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் கணிசமான உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 668 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. சுமார் 1.32 விழுக்காடு அதிகரித்து 51,399.99 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 192.55 புள்ளிகள் உயர்ந்து 15,116.80 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் சிறப்பான உயர்வைக் கண்டன. அதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை, என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: 'பேமண்ட்' வசதியை நிறுத்தும் பிரபல நிறுவனம்!