நேற்றைய வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஆரம்பத்தில் கடும் சரிவைக் கண்டன. மும்பை பங்குச்சந்தை 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், பின்னர் இரண்டாவது பாதியில் மீட்சி கண்டு ஏற்றத்துடனே நிறைவு செய்தது.
வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (பிப். 23) சுமார் 7.09 புள்ளிகள் (0.01 விழுக்காடு) உயர்ந்து 49,751 புள்ளிகளில் நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 32.10 புள்ளிகள் உயர்ந்து 14,707.80 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பங்குகள் 6 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக இன்டஸ்இன்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டைட்டான் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை கோடாக் வங்கி, மாருதி, பஜாஜ் ஆட்டோ, எச்.சி.எல். ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கைப்பை வங்கியைத் தொடங்கிய நகரம் எது தெரியுமா?