ETV Bharat / business

மீண்டும் ஏறுமுகத்தில் இந்திய பங்குச் சந்தை! - கச்சா எண்ணெய் விலை

மும்பை: நேற்று இறக்கத்தைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டும் ஏறுமுகத்தில் வர்த்தகமாகிவருகிறது.

Sensex
Sensex
author img

By

Published : May 5, 2020, 11:02 AM IST

கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் வர்த்தகமான இந்திய பங்குச் சந்தை நேற்று திடீரென்று சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 467 புள்ளிகளை உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

தற்போது சென்செக்ஸ் 313 புள்ளிகள் அதிகரித்து 32,029 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் அதிகரித்து 9387 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.

ஏற்றம்- இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்குகள் ஐந்து விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது. அதேபோல எம் & எம், பாரதி ஏர்டெல், இண்டஸ் இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், டெக் மஹேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. மறுபுறம், ஆசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

அந்நிய முதலீட்டாளர்கள்

திங்கள்கிழமை வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1,373.98 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

காரணம் என்ன?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதால் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பங்குச் சந்தை

ஹாங்காங் பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமானது. அதேபோல அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் நள்ளிரவு வர்த்தகமும் ஏற்றம் கண்டது.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 3.86 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்று 28.25 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்து 75.58 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: முழு அடைப்பால், நாசிக் வெங்காய உற்பத்தி விவசாயிகள் கடும் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.