இந்திய பங்குச்சந்தையில் வார முதல் நாள் வர்த்தகமான இன்று, பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,069 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது.
கரோனா பாதிப்பால் வணிக உலகம் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகளான மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நாளுக்கு நாள் தள்ளாடி வருகிறது.
மேலும் இன்று நடைபெற்ற வர்த்தகத்தில் வங்கி பங்குகள் அனைத்தும் சரிவைச் சந்தித்ததால் சென்செக்ஸ் கடுமையாக சரிந்துள்ளது. மேலும் நிஃப்டி 313.60 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 8,823.25 என வர்த்தகமாகியுள்ளது.
சிறப்பாக செயல்பட்ட பங்குகள்
- டி.சி.எஸ்,
- இன்ஃபோசிஸ்,
- ஐ.டி.சி
- எச்.சி.எல்
சரிவை சந்தித்த பங்குகள்
- ஆக்ஸிஸ் வங்கி
- அல்ட்ராடெக் சிமெண்ட்
- மாருதி சுசூகி
மேலும், நாளை தொடங்க இருக்கும் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் சரிய வாய்ப்புள்ளதாக பங்குதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சாஃப்ட்பேங்க் குழுமத்திலிருந்து விடைபெற்றார் ஜாக் மா!