ETV Bharat / business

பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! - பெட்ரோல் டீசல் விலை

சென்னை: பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 84.52ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எந்தவித மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ. 78.86க்கு விற்கப்பட்டு வருகிறது.

petrol diesel price
petrol diesel price
author img

By

Published : Aug 24, 2020, 12:24 AM IST

சென்னையில் பெட்ரோல் விலையில் 12 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 84.52ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4ஆவது நாளாக பெட்ரோல் விலை உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது.

ஆனால் டீசல் விலை எந்தவித மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ. 78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்களாக டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை நேற்று (ஆகஸ்ட் 23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை நிர்ணயம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

சீனாவிற்கு அடுத்த செக்: செப்., 1 முதல் பொம்மைகளுக்கும் தர பரிசோதனை!

இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

மார்ச் மாதம் கரோனா நோய்க் கிருமி பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.