கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டத்தில் இருந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த 15 நாள்களில் 13ஆவது முறையாக இன்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 பைசா உயர்ந்து ரூ. 83.13க்கும், டீசல் விலை 25 பைசா உயர்ந்து ரூ.73.07க்கு விற்பனையாகிறது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
நவம்பர் 20ஆம் தேதிக்கு பின் பெட்ரோல் விலை 13 முறை உயர்த்தப்படுள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.07 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 2.86 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை
கடந்த அக்டோபர் மாதம் 36.9 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட கச்சா எண்ணெய் விலை தற்போது 34 விழுக்காடு அதிகரித்து 49.5 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 'இந்தியப் பொருளாதாரம் 10 விழுக்காடு சரியும்' - அபிஜித் சென்