ETV Bharat / business

பொட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக உயர்வு!

author img

By

Published : Nov 22, 2020, 4:31 PM IST

டெல்லி: சுமார் இரண்டு மாதங்களாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து உயர்ந்துள்ளது.

Petrol, diesel prices rise for third straight day

கரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கியதால் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு எட்டு பைசா உயர்த்தப்பட்டு 81.46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையும் லிட்டருக்கு 19 பைசா உயர்த்தப்பட்டு 70.88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த முன்று நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தம் 40 பைசாவும் டீசல் விலை 61 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதலும் டீசல் விலை அக்டோபர் 2ஆம் தேதி முதலும் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லக்சம்பர்க் பங்குச் சந்தையுடன் எஸ்பிஐ புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.