ETV Bharat / business

மீண்டும் சரிவின் பாதையில் இந்தியப் பங்குச்சந்தை! - கச்சா எண்ணெய் விலை

இரண்டு நாள்களாக உயர்வைச் சந்தித்துவந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

Stock market Stock market updateupdate
Stock market Stock market updateupdate
author img

By

Published : Apr 24, 2020, 11:45 AM IST

வங்கி, ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்ததால் இந்தியப் பங்குச்சந்தை இறக்கத்தில் தனது வர்த்தகத்தைத் தொடக்கியுள்ளது. தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 411 புள்ளிகள் குறைந்து 31,451 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் குறைந்து 9196 புள்ளிகளிலும் வர்தகமாகிவருகின்றன.

ஏற்றம் & இறக்கம் கண்ட பங்குகள்

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளன. அதைத்தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. ட்வின்ஸ், எஸ்பிஐ, இன்போசிஸ், டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

மறுபுறம் ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா, எல்&டி, ஓ.என்.ஜி.சி., ஹெச்.சி.எல். டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

வியாழக்கிழமை மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.114.53 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

காரணம் என்ன?

ஃபிட்ச் ரேட்டிங் (Fitch Ratings) நிறுவனம் 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 0.8ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளதே இந்தியப் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளதன் காரணமாகக் கருதப்படுகிறது.

அதேபோல சர்வதேச ஜிடிபியும் 3.9 விழுக்காடுவரை குறையும் என்றும் இதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் 2009ஆம் ஆண்டு ஏற்பட்டதைவிட இரண்டு மடங்கு மோசமாக இருக்கும் என்றும் ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

சர்வதேச பங்குச்சந்தை

சர்வதேச அளவில் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் உள்ளிட்ட பங்குச்சந்தையும் சரிவில் வர்த்தகமாகிவருகிறது. அமெரிக்காவில் வால் ஸ்டீரீட் பங்குச்சந்தையின் நள்ளிரவு வர்த்தகமும் சரிவில் முடிந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 5.91 விழுக்காடு அதிகரித்து 22.59 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் 25 பைசா சரிந்து 76.31 ரூபாயாகவுள்ளது.

இதையும் படிங்க: பொருளாதார நடவடிக்கையை மீட்டெடுக்க மத்திய அரசு தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.