Market Update - சந்தை நிலவரம்: புதிய உச்சத்தில் நிஃப்டி பங்குகள்! - இன்றைய சந்தை நிலவரம்
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி(Nifty) புதிய உச்சத்தில் இன்று வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (மே.27) 97.70 (0.19 விழுக்காடு) உயர்ந்து 51,115.22 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 36.40 (0.24 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,337.85 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது. இதன் மூலம் நிஃப்டி இதுவரை கண்டிராத புதிய உச்சத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக குறையத் தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, பாரத ஸ்டேட் வங்கி, கோடாக் வங்கி, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டெக், நெஸ்லே இந்தியா, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை எச்.டி.எஃப்.சி, பாரதி ஏர்டெல், மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: இனி 100 மீட்டர் தூரம் வாகனங்கள் நின்றால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை!