மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், பொருளாதார நடவடிக்கைகள் ஊசலாட்டத்தில் உள்ளன.
இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்திலேயே வலுவிழந்து ஐடி துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தது, சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
டாக்டர் ரெட்டீஸ் லேப், இண்டஸ்இந்த், டாடா ஸ்டீல், கிராசிம், பார்தி இன்ஃப்ரா டெல் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ரிலையன்ஸ், நெஸ்லே, எச்.சி.எல் டெக், மஹிந்திரா & மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 421.82 புள்ளிகள் குறைந்து 38,071.13 புள்ளிகளில் வர்த்தகமானது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 97.70 புள்ளிகள் குறைந்து 11,202.85 புள்ளிகளில் நிறைவுற்றது.
'நிபந்தனைகளுடன் முகக் கவசம், மருத்துவக் கண்ணாடிகளை ஏற்றுமதி செய்யலாம்' - மத்திய அரசு
ரூபாய்
நேற்று ரூ.75.85 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் ஐந்து காசுகள் உயர்ந்து ரூ.74.80 காசுகளாக இருந்தது.
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 18 புள்ளிகள் உயர்ந்து 3095 ரூபாயாக வர்த்தகமானது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 189 புள்ளிகள் உயர்ந்து 52,780 ரூபாயாக வர்த்தகமானது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 517 புள்ளிகள் உயர்ந்து 65,521 ரூபாயாக வர்த்தகமானது.