மும்பை: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, மும்பை பங்குச் சந்தை குறியிட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஆகஸ்ட் 24) உயர்வுடன் நிறைவடைந்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
ஜீ எண்டெர்டெய்ன், கோட்டக் மஹிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி., வங்கி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. பவர் கிரிட் கார்ப், ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, எம் & எம் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 364.36 புள்ளிகள் உயர்ந்து 38,799.08 புள்ளிகளாக இருந்தது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 94.85 புள்ளிகள் உயர்ந்து 11,466.45 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
74 ரூபாய் 84 காசுகளாக நிலை பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 53 காசுகள் உயர்ந்து 74 ரூபாய் 31 காசுகளாக இருந்தது.
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 2 புள்ளிகள் சரிந்து 3,156 ரூபாயாக வர்த்தகமானது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 326 புள்ளிகள் சரிந்து 51,690 ரூபாயாக வர்த்தகமானது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 777 புள்ளிகள் சரிந்து 66,290 ரூபாயாக வர்த்தகமானது.