வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 360 புள்ளிகள் உயர்ந்து, தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. இன்று நாள் முழுவதும், தொடர்ந்து ஏற்றத்திலேயே இந்திய பங்குச்சந்தை வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 399 புள்ளிகள் உயர்ந்து 37,419 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 120.50 புள்ளிகள் உயர்ந்து 11,022.20 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக பிரிட்டானியா நிறுவனத்தின் பங்குகள் ஐந்து விழுக்காடு வரை ஏற்றம் கண்டு வர்த்தகமானது. அதேபோல் விப்ரோ, இன்போசிஸ், ஹெச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
மறுபுறம் சன் பார்மா, சிப்லா, ஜீல், பி.பி.சி.எல்., டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை