வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 172.61 புள்ளிகள் (0.43 விழுக்காடு) சரிந்து 39,749.85 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58.80 புள்ளிகள் (0.5 விழுக்காடு) சரிந்து 11,670.80 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் 3.02 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக டெக் மஹேந்திரா, அல்ட்ரா சிமென்ட்ஸ், ஹெச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை எல்&டி, டைட்டான், அதானி போர்ட்ஸ், ஓ.என்.ஜி.சி., ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை:
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,380-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.62,410-க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: ஊரடங்கு... விலையேற்றம்... தங்கத்தின் மீதான மவுசு குறைகிறதா?