மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட சுமார் 56 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது.
இன்று நாள் முழுவதும் சரிவடைந்தே வர்த்தகமான மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இறுதியில் 146.36 புள்ளிகள் (0.39 விழுக்காடு) சரிந்து 36,594.33 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.40 புள்ளிகள் (0.42 விழுக்காடு) சரிந்து 10,768.05 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் மூன்று விழுக்காடு வரை சரிவடைந்து வர்த்தகமானது. அதேபோல் இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டான், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன.
மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, ஹெச்.யூ.எல், பாரதி ஏர்டெல், டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
சர்வதேச பங்குச்சந்தை
ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தைகள் சரிவடைந்து வர்த்தகமானது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டே வர்த்தகமாகிவருகின்றன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2.08 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 44.47 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் திரும்பும் வரலாறு - டாடா கைக்கு திரும்பச் செல்லும் மகாராஜா!