கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட சுமார் 340 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது.
வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429.25 புள்ளிகள் (1.21 விழுக்காடு) அதிகரித்து 35,843.70 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121.65 புள்ளிகள் (1.17 விழுக்காடு) அதிகரித்து 10,551.70 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் ஆறு விழுக்காடு வரை ஏற்றம் கண்டது. அதேபோல் டைட்டன், ஹெச்.சி.எல் டெக், டாடா ஸ்டீல், இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
மறுபுறம், ஆக்சிஸ் வங்கி, எச்.யூ.எல், கோட்டக் வங்கி மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
சர்வதேச பங்குச் சந்தை
ஹாங்காங், ஷாங்காய் பங்குச் சந்தைகள் ஏற்றத்திலும், டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகள் இறக்கத்திலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் தற்போது ஏற்றம் கண்டே வர்த்தகமாகிவருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.86 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 42.39 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 56 பைசா குறைந்து 75.04 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: அமெரிக்கா வழியே இந்தியாவுக்குள் நுழையும் சீன நிறுவனங்கள்