ETV Bharat / business

தாறுமாறாக உயரும் இந்திய பங்குச்சந்தை!

மும்பை: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை இன்று பெரியளவில் உயர்ந்துள்ளது.

தாறுமாறாக உயரும் இந்திய பங்குச்சந்தை!
தாறுமாறாக உயரும் இந்திய பங்குச்சந்தை!
author img

By

Published : Nov 9, 2020, 5:37 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 600 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 704.37 புள்ளிகள் (1.68 விழுக்காடு) உயர்ந்து 42,597.43 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.50 புள்ளிகள் (1.61 விழுக்காடு) உயர்ந்து 12,461.05 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக டிவிஸ்லேப் நிறுவனத்தின் பங்குகள் 5.49 விழுக்காடு ஏற்றம் கண்டது. மேலும், பாரதி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனத்தின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.

மறுபுறம் சிப்லா, அதானிபோர்ட்ஸ், மாருதி, ஐடிசி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

தாறுமாறாக உயரும் இந்திய பங்குச்சந்தை!

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 370 ரூபாய் உயர்ந்து ரூ.49,220-க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 10 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ ரூ.65,400க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.23-க்கும், டீசல் ரூ.76.03-க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: கப்பல் அமைச்சகத்தின் பெயரை மாற்றிய பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.