மும்பை: பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையால் வர்த்தகம் இன்று (ஆகஸ்ட் 12) சரிவைக் கண்டு நிறைவடைந்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
எச்.சி.எல் டெக், எஸ்.பி.ஐ., ஈச்சர் மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. கோடக் மஹிந்திரா, சிப்லா, பிரிட்டானியா, ஹிண்டால்கோ, பிபிசிஎல் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
நோக்கியா 5310: பழமை விரும்பிகளை கவரவரும் புது பியூச்சர் போன்
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.38 புள்ளிகள் சரிந்து 38,369.63 புள்ளிகளில் வர்த்தகமானது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 14.10 புள்ளிகள் சரிந்து 11.308.40 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
நேற்று (ஆகஸ்ட் 11) ரூ.74.78 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மூன்று காசுகள் ஏற்றம் கண்டு ரூ.74.83 காசுகளாக இருந்தது.
இந்தியாவில் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்!
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 39 புள்ளிகள் உயர்ந்து 3170 ரூபாயாக வர்த்தகமானது
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 191 புள்ளிகள் உயர்ந்து 52,120 ரூபாயாக வர்த்தகமானது
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 300 புள்ளிகள் சரிந்து 66,634 ரூபாயாக வர்த்தகமானது