மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், பொருளாதார நடவடிக்கைகள் ஊசலாட்டத்தில் உள்ளது.
இதனால், வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்திலேயே வலுவிழந்த பங்கு வர்த்தகம் இறக்கத்தில் முடிந்தது. மேலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமை இயக்குநரான ஆதித்யா புரி தன்னிடம் உள்ள 842.87 கோடி மதிப்புள்ள 74 லட்ச பங்குகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இதன் விற்பனை ஜூலை 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், பிபிசிஎல் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
ஐசிஐசிஐ வங்கி, ஜீ எண்டர்டெய்ன், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற உத்தரவு ஜூன் 1, 2021 வரை நீட்டிப்பு!
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 194.17 புள்ளிகள் குறைந்து 37,934.73 புள்ளிகளில் வர்த்தகமானது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 62.35 புள்ளிகள் குறைந்து 11,131.80 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
நேற்று ரூ.74.83 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு பைசா சரிந்து ரூ.74.84 காசுகளாக இருந்தது.
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 2 புள்ளிகளை இழந்து 3070 ரூபாயாக வர்த்தகமானது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 1,030 புள்ளிகள் உயர்ந்து 52,065 ரூபாயாக வர்த்தகமானது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 4,074 புள்ளிகள் உயர்ந்து 65,297 ரூபாயாக வர்த்தகமானது.