மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சர்வதே பங்குச் சந்தை எதிரொலியாக வியாழக்கிழமை வர்த்தகத்தைவிட சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது.
ஏற்றம்- இறக்கம் என மாறி மாறி இன்று நாள் முழுவதும் பங்குச் சந்தை வர்த்தகமானது. இந்த வாரத்தின் இறுதி வர்த்க நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 177.72 புள்ளிகள் (0.50 விழுக்காடு) உயர்ந்து 36,021.42 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 55.65 புள்ளிகள் (0.53 விழுக்காடு) உயர்ந்து 10607.35 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக நான்கு விழுக்காடு வரை ஏற்றமடைந்தது. அதேபோல் பஜாஜ் ஆடோ,
டிசிஎஸ், டைட்டான், ஹெச்.சி.எல். டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம் இண்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
காரணம் என்ன?
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் எதிரொலியாகவும், கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் வெற்றிகரமாக சென்றுகொண்டிருப்பதாலும் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. இருப்பினும், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பங்குச் சந்தை தனது பெருமளவு லாபத்தை இழந்ததாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பங்குச் சந்தை
ஹாங்காங், ஷாங்காய், டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவிலேயே வர்த்தகமாகிவருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.69 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 42.41 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா குறைந்து 74.66 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: எங்கள் தயாரிப்புகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன - ஒன் பிளஸ்