இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 154.45(0.34%) புள்ளிகள் உயர்ந்து 46,253.46 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசியப் பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 44.30 (0.33%) புள்ளிகள் உயர்ந்து 13,558.15 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்குகள் 5 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல சிப்லா, இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. மறுபுறம் ஈசர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டர்ஸ், எச்.டி.எஃப்.சி., டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
தங்கம், வெள்ளி விலை
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 470 ரூபாய் குறைந்து 46,110 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 63,200 ரூபாய்க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.53 ரூபாய்க்கும், டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: பிக்கி அமைப்பின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்பு