ETV Bharat / business

இழுபறியில் இந்தியப் பங்குச்சந்தை! - சென்செக்ஸ்

இன்று மதியம் வரை ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச்சந்தை, மாலை பெரியளவில் சரிவை எதிர்கொண்டது.

Market Roundup
Market Roundup
author img

By

Published : Nov 2, 2020, 7:18 PM IST

இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.51 புள்ளிகள் (0.36 விழுக்காடு) உயர்ந்து 39,757.58 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26.75 புள்ளிகள் (0.26 விழுக்காடு) உயர்ந்து 11,669.15 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 6.45 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன.

மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.சி.எல். டெக், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.

இழுபறியில் இந்தியப் பங்குச்சந்தை!

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,590-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.61,700க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.21க்கும், டீசல் ரூ.76.01-க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: யுபிஐ பரிவர்த்தனைகள் 80% அதிகரிப்பு - நிதி ஆயோக் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.