மும்பை: முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையால் இழந்த பங்குச் சந்தை இன்று சரிவைக் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
சோழமண்டலம், டி.வி.எஸ் மோட்டார், அதானி போர்ட்ஸ், ஜீ என்டர்டெயின், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. முறையே பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், எம்.ஆர்.எஃப், கோத்ரேஜ் கன்ஸ்யூமர், பாங்க் ஆப் பரோடா போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.78 புள்ளிகள் குறைந்து 39,614.07 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 28.40 புள்ளிகள் குறைந்து 11,642.40 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் மதிப்பிழந்து ரூ.74.10 ஆக இருந்தது.
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 11 புள்ளிகள் சரிந்து 2,687 ரூபாயாக இருந்தது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 439 புள்ளிகள் உயர்ந்து 50,721 ரூபாயாக இருந்தது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 682 புள்ளிகள் உயர்ந்து 60,854 ரூபாயாக இருந்தது.