இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 37.40 புள்ளிகள் (0.08 விழுக்காடு) சரிந்து 44,618.04 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 4.70 புள்ளிகள் (0.04 விழுக்காடு) சரிந்து 13,113.75 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக கெயில் நிறுவனத்தின் பங்குகள் 4.88 விழுக்காடு உயர்ந்தது. அத்துடன், ஓ.என்.ஜி.சி., ஏசியன் பெயின்ட்ஸ், கோல் இந்தியா, டைடான் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
அதேவேளை கோடக் வங்கி, டைட்டான், எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து 45,740 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை ரூ.1,500 உயர்ந்து ஒரு கிலோ 61,700 ரூபாய்க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.44, டீசல் ரூ.78.06 விற்பனையானது.
இதையும் படிங்க: அசோக் லேலண்ட் வாகன விற்பனை உயர்வு!