வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 1,114.82 புள்ளிகள் (2.96 விழுக்காடு) சரிந்து 36,553.60 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 326.30 புள்ளிகள் (2.96 விழுக்காடு) சரிந்து 10,805.55 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவைச் சந்தித்துவருகின்றன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்குகள் 2.85 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக ஜீல், இந்துஸ்தான் யுனி லீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.
இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 7.45 விழுக்காடு சரிவைச் சந்தித்தது. டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், க்ராசிம், டி.சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை:
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,550-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.57,000-க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.76.72க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: இந்தியாவில் மின்னணு வர்த்தகத்தை நிறுவிய ஆப்பிள் நிறுவனம்!