ETV Bharat / business

காளையின் பிடியில் இந்திய பங்குச்சந்தை - புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் - தங்கம் விலை

மும்பை: கரோனா தடுப்பு மருந்து குறித்து நேர்மறை செய்திகள் உள்ளிட்டவற்றின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளன.

Market Roundup
Market Roundup
author img

By

Published : Dec 8, 2020, 5:31 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 250 புள்ளிகள் உயர்ந்து 45,682 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை தொடங்கியது.

ஏற்றம் - இறக்கம் என மாறிமாறி கண்ட மும்பை பங்குச்சந்தை இறுதியில் 181.54 புள்ளிகள் (0.40 விழுக்காடு) அதிகரித்து 45,608.51 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல, தொடர்ந்து ஆறாவது நாளாக ஏற்றம் கண்ட தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.20 புள்ளிகள் (0.28 விழுக்காடு) உயர்ந்து 13,435.45 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காடுற்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல டிசிஎஸ், ரிலையன்ஸ், விப்ரோ, ஹெச்.சி.எல். டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம் ஹிண்டால்கோ, சன் பார்மா, கோல் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 970 ரூபாய் அதிகரித்து 47,330 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 2,500 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 65,500 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: '5ஜி சேவையில் தனித்திருப்பது ஆபத்தானது' - அம்பானிக்கு ஏர்டெல் பதிலடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.