ETV Bharat / business

சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை - Nifty today

மும்பை: தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தை இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

Indian Stock market today
Indian Stock market today
author img

By

Published : Jun 30, 2020, 7:24 PM IST

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட சுமார் 214 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது. இருப்பினும், இன்றைய நாளின் பிற்பகுதியில், இந்திய பங்குச் சந்தை சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.72 புள்ளிகள் (0.13 விழுக்காடு) சரிந்து 35,915.80 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.30 புள்ளிகள் (0.10 விழுக்காடு) சரிந்து 10,302.10 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக பவர் கிரிட் நிறுவனத்தின் பங்குகள் 2 விழுக்காடு வரை சரிவடைந்தது. அதேபோல் சன் பார்மா, ஐடிசி, ஓஎன்ஜிசி, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

மறுபுறம், மாருதி, நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை

சர்வதேச பங்குச் சந்தை

ஹாங்காங், டோக்கியோ, ஷாங்காய், சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம், இறக்கம் என்று மாறி மாறி வர்த்தகமாகி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.36 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 41.28 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏழு பைசா அதிகரித்து 75.51 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? - இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.