ETV Bharat / business

எல்ஐசி பங்கு விற்பனையை அரசு கைவிட வேண்டும் - ஊழியர்கள் போராட்டம்

சென்னை: எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய நிதியமைச்சரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்ஐசி கட்டடத்தின் வாயில் அருகே அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Feb 3, 2020, 6:57 PM IST

புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலமாக எல்.ஐ.சியின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலக வாயிலில் எல்ஐசி ஊழியர்கள், அனைத்து மட்ட வளர்ச்சி அதிகாரிகள், எல்ஐசி முகவர்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் சொத்தாக விளங்கும் எல்ஐசி, தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறது என்று கூறிய போராட்டக்காரர்கள், லாபம் தரும் பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

எல்ஐசி நிறுவனம் ஆண்டுதோறும் அரசுக்குத் தேவையான நிதியை தந்துகொண்டிருக்கிறது

இது தொடர்பாக பேசிய அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ரமேஷ், ” எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். இது தவறான முடிவு. எல்ஐசி நிறுவனம் ஆண்டுதோறும் அரசுக்குத் தேவையான நிதியை தந்துகொண்டிருக்கிறது. மக்களின் கருத்துக்கும், ஊழியர்களின் கருத்துக்கும் மதிப்பளித்து எல்ஐசி பங்கு விற்பனையை அரசு கைவிட வேண்டும். எல்ஐசி பங்கு விற்பனையைக் கண்டித்து நாளை ஒரு மணி நேரம் வெளிநடப்பு, வேலை நிறுத்தம் நடைபெறும். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் “ எனக் கூறினார்.

எல்ஐசி பங்கு விற்பனையை அரசு கைவிட வேண்டும் - ஊழியர்கள் போராட்டம்

இதையும் படிங்க: நிதிப் பற்றாக்குறை தப்பிக்க முயற்சிக்கும் நிர்மலா சீதாராமன்

Intro:Body:புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலமாக எஸ்ஐசியின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலக வாயிலில் எல்ஐசி ஊழியர்கள், அனைத்து மட்ட வளர்ச்சி அதிகாரிகள், எல்ஐசி முகவர்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் சொத்தாக விளங்கும் எல்ஐசி தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறது என்று கூறிய போராட்டகாரர்கள், லாபம் தரும் பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்து ஏன் என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக பேசிய அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் (அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தின் சென்னை பகுதி ஒன்றிய பொதுச் செயலாளர்), பிப்ரவரி 1 ஆம் தேதி எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை அறிவித்திருக்கிறார். இது தவறான முடிவு, எல்ஐசி நிறுவனம் ஆண்டுதோறும் அரசுக்கு தேவையான நிதியை தந்துகொண்டிருக்கிறது. இதனை அரசு கைவிட வேண்டும். இது நாட்டுக்கு மக்களுக்கு எதிரான முடிவு. மக்களின் கருத்துக்கும், ஊழியர்களின் கருத்துக்கும் மதிப்பளித்து எல்ஐசி பங்கு விற்பனையை அரசு கைவிட வேண்டும். எல்ஐசி பங்கு விற்பனையை கண்டித்து நாளை ஒரு மணி நேரம் வெளிநடப்பு வேலை நிறுத்தம் நடைபெறும். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
Conclusion:visual, bite in mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.