டெல்லி: 4.23 விழுக்காடு யெஸ் வங்கி பங்குகளை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக 0.75 விழுக்காடு அளவிலான யெஸ் வங்கியின் பங்குகளை வைத்திருந்த எல்.ஐ.சி நிறுவனம், தற்போது கையகப்படுத்தியுள்ள 4.23 விழுக்காடு பங்குகளையும் சேர்த்து மொத்தமாக 4.98 விழுக்காடு யெஸ் வங்கி பங்குகளை தன் வசம் கொண்டுள்ளது.
யெஸ் வங்கியில் எஸ்பிஐ முதலீடு!
எல்.ஐ.சி நிறுவனம் 4.23 விழுக்காடு, அதாவது 105.98 கோடி பங்குகளை தற்போது வாங்கியுள்ளது. முன்னதாக 0.75 விழுக்காடு அளவிலான 19 கோடி பங்குகளை வாங்கியிருந்தது. மொத்தமாக 124.98 கோடி யெஸ் வங்கி பங்களை பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி வாங்கியுள்ளது.
இதனை கையகப்படுத்தும் காலம் செப்டம்பர் 21, 2017 முதல் ஜூலை 31, 2020 வரை இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் மூடீஸ் வணிக பகுப்பாய்வு நிறுவனம் யெஸ் வங்கியின் நிலை, பிற நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு உகந்ததாக இல்லை என்று தன் தரப்பட்டியலில் கீழிறக்கி வரிசைப்படுத்தியிருந்தது.
யெஸ் வங்கி முறைகேடு: அமலாக்கத் துறை வளையத்தில் வதாவன் சகோதர்கள்
இப்படிப்பட்ட மதிப்பீடுகளை கொண்ட யெஸ் வங்கி மீது எல்.ஐ.சி முதலீடு செய்திருப்பது வணிக வட்டாரத்தில் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இச்சூழலில் இன்றைய வர்த்தக நாளில் யெஸ் வங்கியின் பங்குகள் 4.60 விழுக்காடு உயர்வைக் கண்டு வர்த்தகமாகின்றன.