ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம், இந்திய ரயில்வேயில் உணவு பொருட்கள், டிக்கெட் புக்கிங் மற்றும் இந்திய ரயில் நிலையங்களில் குடிதண்ணீா் ஆகிய சேவைகளை கட்டணத்தின் போில் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் தற்போது விாிவாக்க பணிக்காக, பங்குகள் வெளியீட்டில் இறங்க உள்ளது. அதன்மூலம், ரூ.640 கோடிகள் வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று விற்பனைக்கு வருகின்றது. பங்குகளின் ஆரம்ப விலை (IPO) ரூ.315 முதல் ரூ.320 வரை நிா்ணயிக்கப்பட்டு உள்ளது.
சில்லரை முதலீட்டாளர்களும் முதலீடு செய்யலாம். அங்கீகாிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.10 தள்ளுபடி செய்யப்படும். மொத்தம் இரண்டு கோடி பங்குகள் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்கு விற்பனை வருகிற 3-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஒருவா் குறைந்தப்பட்சம் 40 பங்குகள் வரை வாங்க வேண்டும். 35 விழுக்காடு பங்குகள் சில்லரை முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் ஐ.ஆர்.சி.டி.சி. தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.சி) மற்றும் மும்பை பங்குச்சந்தையில் (பி.எஸ்.சி.) பங்குகள் வெளியிட பதிவு செய்தது.
2019-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் லாபத்தில் பயணித்துவருகிறது. இதற்கிடையில் பெருநிறுவன வரி (காா்ப்பரேட்) குறைப்பும், ஐ.ஆர்.டி.சி.க்கு சாதகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.