இந்திய பங்குச் சந்தை இன்று நாள் முழுவதும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்தது. இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232.24 புள்ளிகள்(0.74 விழுக்காடு) அதிகரித்து 31,685.75 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.3 புள்ளிகள்(0.71 விழுக்காடு) அதிகரித்து 9270.9 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
எம்&எம் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது. அதைத்தொடர்ந்து பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் ஏற்றமடைந்தன.
மறுபுறம் ஐ.டி.சி. நிறுவனத்தின் பங்குகள் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் சரிவடைந்தது. அதேபோல ஹெச்.யு.எல்., டி.சி.எஸ்., டைட்டன், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
காரணம் என்ன?
கோவிட்-19 பரவல் காரணமாகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருப்பதாலும், பெரு நிறுவனங்களின் லாபம் சரிவைச் சந்தித்துள்ளதாலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பங்குச் சந்தை
சர்வதேச அளவில் ஷாங்காய், ஹாங்காங், சியோல் பங்குச் சந்தை ஏற்றம் கண்டன. ஐரோப்பிய பங்குச் சந்தையும் ஏற்றத்திலேயே தற்போது வர்த்தகமாகிவருகிறது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை 1.65 விழுக்காடு அதிகரித்துப் பேரல் ஒன்றுக்கு 31.48 அமெரிக்கா டாலருக்கு வர்த்தகமானது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா சரிந்து 75.72 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் வரியை உயர்த்திய மத்திய அரசு!