மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. தற்போது சென்செக்ஸ் 492.23 புள்ளிகள் சரிந்து 31,068.99 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 136.95 புள்ளிகள் சரிந்து 9,102.25 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சுமார் மூன்று விழுக்காட்டிற்கு மேல் சரிவைச் சந்தித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஹெச்.டி.எஃப்.சி, மாருதி, ஓ.என்.ஜி.சி, ஹெச்.யூ.எல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் வங்கி ஆகிய நிறுவனத்தின் பங்குகளும் சரிவடைந்துள்ளன. மறுபுறம் அல்ட்ராடெக் சிமென்ட், டெக் மஹிந்திரா, சன் பார்மா, ஐடிசி, என்.டி.பி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
காரணம் என்ன?
கரோனா பரவல் இரண்டாவது முறையாக மீண்டும் பரவலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுவதால் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
திங்கள் கிழமை வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 534.87 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
சர்வதேச பங்குச் சந்தை
ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் பங்குகள் நள்ளிரவு வர்த்தகம் ஏற்றமடைந்தன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.24 விழுக்காடு உயர்ந்து பேரல் ஒன்று 29.70 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: ஐஆர்சிடிசி பங்குகள் உயர்வு - காரணம் இதுதானா?