வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ( Know Your Customer) பிரிவிலான விதிகளை பின்பற்றாமை, பண மோசடி தடுப்பு நடவடிக்கைகளுக்கான விதிகளுக்கு முரணாக செயல்பட்டதற்காக இந்தியன் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 1.75 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமையகமாக இயங்கி வருகிறது. இதன் ஆளுநராக தற்போது சக்திகாந்த தாஸ்(Shaktikanta Das) இருந்து வருகிறார்.
மேலும், வங்கிகளின் செயல்பாடுகள், நிர்வாகம் உள்ளிட்டவைகளை கண்காணித்து மக்களுக்கு சிறந்த நிதிச்சேவைகளை அளிக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளின்படியே, நாட்டின் அனைத்து வங்கிகளும் செயல்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை எந்த ஒரு வங்கி மீறினாலும், அந்த வங்கியின் மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுக்கும். தற்போது இந்தியன் வங்கி 2018 மார்ச் 31ம் தேதி கணக்கின்படி, ரூ.508.28 கோடி அளவிற்கு கடன் வழங்கியது மேலும் வங்கியின் நிதி நிர்வாகத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை காலம் தாழ்த்தி அறிவித்தது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதால் இந்தியன் வங்கிக்கு 1.75 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்செக்ஸ்சிலிருந்து வெளியேறும் டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி பங்குகள்