ETV Bharat / business

புதிய மின் நிலையம் அமைக்க ஒப்புதல்... கௌதம் அதானியின் கரோனா கால திட்டம்! - மின்சார கொள்முதல் ஒப்பந்தம்

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் 1320 மெகாவாட் அளவுள்ள தெர்மல் பவர் பிளான்ட் அமைக்க, மத்தியப் பிரதேச மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதானி பவர் ஆர்ம் பெஞ்ச் தெர்மல் ஆலையில் இருந்து முழு மின்சாரத்தினையும் மாநிலத்திற்கு பெறவும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

gautham adani
gautham adani
author img

By

Published : May 28, 2020, 8:10 PM IST

அதானி குழுமத்தைச் சேர்ந்த பெஞ்ச் தெர்மல் எனர்ஜி நிறுவனம், மத்தியப் பிரதேச பவர் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன், 1320 மெகாவாட் மின்சாரத்தினை நீண்டகால அடிப்படையில் உற்பத்தி செய்வதற்கான, மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், மத்தியப் பிரதேசத்தில் அதானி குழுமம், தெர்மல் பவர் பிளான்ட் அமைக்க, மத்தியப் பிரதேச ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மின் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு மத்தியப்பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முறையாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வளர்ச்சி மின் துறையின் நீண்டகால வளர்ச்சி திறன் குறித்த, நிறுவனத்தின் நம்பிக்கையையும், அனைவருக்கும் மின் சக்தியின் லட்சிய இலக்கையும் அடைவதின் முக்கியத்துவத்தினையும் உறுதிப்படுத்துகிறது என்றும் அறியப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின் உற்பத்தித் திறனை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் கிடைத்த அனுபவங்களை இணைப்பதில், அதானி நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 2.57% வீழ்ச்சி, கண்டு 36.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

அதானி குழுமம் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குறிப்பாக சுரங்க வணிகம், நிலக்கரி, எண்ணெய் வணிகம், விவசாய பொருட்கள், சோலார் பவர் உற்பத்தி, விமானத்துறை, கட்டமைப்புத்துறை எனப் பல துறைகளில் வளர்ச்சி கண்டு வரும் அதானிக்கு, தற்போது கையில் லட்டு கிடைத்தது போல், மின்சார கொள்முதல் ஒப்பந்தமும் கிடைத்துள்ளது.

சிறப்பாகச் செயல்படும் கௌதம் அதானி, இந்த கரோனா காலத்தைப் பயன்படுத்தி, பல முயற்சியில் ஈடுபடவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக - திமுக எம்பிக்கள் கையெழுத்துடன் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.