ஒரு நாட்டின் பணத்தை வேறு ஒரு நாட்டின் பண அளவில் குறிப்பிடுவது தான் அன்னிய செலாவணி. அதாவது ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் (Foreign Exchange).
பங்குச்சந்தை போன்றே அந்நியச் செலாவணி சந்தையும் செயல்படும். ஒரு நாட்டின் அன்னியச் செலாவணி சந்தையில், நான்கு வகை நபர்கள் உண்டு. ஒன்று, அன்னியச் செலாவணியை வாங்கவும், விற்கவும் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள், இரண்டு, இவர்களுக்காக அந்நியச் செலாவணியை வாங்கவிருக்கும் வங்கிகள், மூன்று, அன்னியச் செலாவணி தரகர்கள், நான்கு, அந்நாட்டின் மத்திய வங்கி.
தற்போது கரோனா வைரஸ் பரவலால் பணப்பரிமாற்றம் கடுமையாகக் குறைந்துள்ளதால் ஃபாரக்ஸ் (FOREX) என்ற அந்நியச் செலாவணி சந்தை 12 ஆண்டுகள் கண்டிராதக் கடும் சரிவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது நடைபெற்றுவரும் இந்தச் சரிவால் கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இணைந்து தும்முவோம்... கரோனாவைப் பரப்புவோம்... வேலையிழந்த பரிதாபம்!