இந்தியா முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், மின் விநியோக நிறுவனங்களில் கட்டண வசூல் அளவு எப்போதும் இல்லாத வகையில், சுமார் 80 விழுக்காடு குறைந்துள்ளது. தற்போது பெறப்பட்டுள்ள கட்டணம், விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இந்நிலையில் மின்சார உற்பத்திக்கு பவர் பிளான்ட்-க்குத் தேவையான நிலக்கரி வாங்கவும், மின்சாரக் கடத்தலுக்கான செலவுகளுக்கு நிதி இல்லாமலும் தவித்து வருகிறது, மின்சார விநியோக நிறுவனங்கள்.
தற்போது மின்சார விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் நிலவி வரும் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய, இத்துறை தற்போது மத்திய அரசிடம் உடனடியாக 90,000 கோடி ரூபாய் நிதி உதவியை நாடி வருகிறது.
அந்த 90,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தருவதாக அறிவித்த நிலையில், அதற்கான சில விதிமுறைகளை விதித்துள்ளது.
அதன்படி மின்சார விநியோக நிறுவனங்கள், இனி ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர்களை பயன்படுத்த வேண்டும் எனவும், கட்டணப் பட்டியலை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உணவிற்கு வழியில்லை... குடிபெயர்ந்த தொழிலாளர் தற்கொலை!