பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காலகட்டத்தில் வணிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 2019ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பெரும் சரிவு எதையும் சந்திக்காமல் முன்னேறிச்செல்கிறது பிரென்ட் கச்சா எண்ணெய்.
ஆண்டின் தொடக்கத்தில் பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை உலக வர்த்தகத்தில் 45 டாலராகவும், இந்திய பொருள் வணிக வர்த்தகமான எம்.சி.எக்ஸ்.இல் (MCX) ரூ.3,155 ஆகவும் இருந்தது.
தற்போதைய சந்தை நிலவரப்படி பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை உலக வர்த்தகத்தில் 59.95 டாலராகவும், இந்திய பொருள் வணிக வர்த்தகமான எம்.சி.எக்ஸ்.இல் (MCX) ரூ.4,142 ஆக வர்த்தகமானது.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் (OPEC) அங்கம் வகிக்கும் சில நாடுகள் தங்களின் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால் இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.