சீனாவில் தொடங்கி, தற்போது உலகையே மிரட்டி வரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று நோய் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோயால் நாட்டில், இதுவரை 59 பேர் வரைப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கோழி இறைச்சி உள்ளிட்ட இறைச்சி உண்பது மூலம் கோவிட்-19 பரவுவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் காட்டுத்தீப்போல் பரவி வருகின்றன.
இவை பொய்யென மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில், கடந்த சில வாரங்களாக கோழி இறைச்சியின் விற்பனை 30 முதல் 35 விழுக்காடு வரை சரிந்துள்ளதாகவும், பிராய்லர் சிக்கன் விலை 50 விழுக்காட்டுக்கும் குறைவாக விற்கப்படுவதாகவும் மொத்த விலை வியாபாரிகளும், உணவு நிறுவனங்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மகாராஷ்டிரா கோழி வளர்ப்பாளர்கள் சங்கத் தலைவர் வசந்த் குமார் ஷெட்டி கேட்டபொழுது, "கோழி உள்ளிட்ட இறைச்சிகளின் தேவை குறைந்து வருவதால், இத்துறைக்கு சுமார் 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
மோனிசின் என்ற மொத்த விலை வியாபாரி பேசுகையில், "தினசரி விலை மாற்றம் நிகழ்வது வழக்கம் தான். ஆனால் கேரளாவில் எப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வெளியானதோ... அப்போதிலிருந்தே கோழி இறைச்சியின் விலை 55ஆக குறைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் 90 ரூபாயாக விற்கப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க : கொரோனா சூரனை எரித்து ஹோலி கொண்டாடிய மும்பைவாசிகள்!