கரோனா வைரஸ் பாதிப்பால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையான சவால்களை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், சிறு, குறு நிறுவனங்களைப் பாதுகாக்கவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பங்குச்சந்தையில் அடங்கியுள்ள அனைத்து நிறுவனங்களும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குச்சந்தைக்குச் செலுத்தி வரும்.
தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து நிறுவனங்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. அதனால், பங்குச்சந்தையில் அடங்கியுள்ள சிறு, குறு நிறுவனங்களும் இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையில் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக சென்செக்ஸ், நிஃப்டி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாளை தொடங்க இருக்கும் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி செயல்பாடு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்!