ஆசியாவின் மூன்றாவது பெரிய பங்குச் சந்தையான ஹாங் காங் பங்குச் சந்தை (Hong Kong Exchanges and Clearing ) நேற்று வெளியிட்ட அறிவிப்பில் லண்டன் பங்குச் சந்தையை (London Stock Exchange Group) விலைக்கு வாங்க உள்ளதாகவும், இதற்காக 36.6 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளது. மிகப்பெரிய பங்குச் சந்தைகளான ஹாங் காங் பங்குச் சந்தை, லண்டன்ச் பங்கு சந்தை இணைவதன் மூலம் இரண்டு நாட்டு பொருளாதாரமும் பெரும் அளவில் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் இது குறித்து பேசிய ஹாங் காங் பங்குச் சந்தையின் தலைமை நிர்வாகி சார்லஸ் லி, இரண்டு பங்குச் சந்தையும் அதிக நிதி வலிமை, நிரூபிக்கப்பட்ட வளர்ச்சி உடையது. இதனை இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பாகவும், ஆபத்து குறைந்ததாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சி.என்.என்-க்கு அளித்த தகவல் மூலம் , லண்டன் பங்குச் சந்தையை 27 பில்லியன் டாலருக்கு வாங்க ஹாங் காங் பங்குச் சந்தை முயற்சித்து தோல்வி அடைந்த நிலையில், 36.6 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.