ETV Bharat / business

புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்! - புதிய தலைமை பொருளாதார ஆலோசகர்

நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Anantha Nageswaran
Anantha Nageswaran
author img

By

Published : Jan 28, 2022, 10:18 PM IST

Updated : Jan 29, 2022, 6:33 PM IST

டெல்லி : 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இரு தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக (Chief Economic Advisor) டாக்டர். வி ஆனந்த நாகேஸ்வரன் (V Anantha Nageswaran) வெள்ளிக்கிழமை (ஜன.28) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் தனது 3 ஆண்டு பணியை நிறைவுசெய்துவிட்டு தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி கல்விப் பணிக்கு திரும்பினார்.

இந்த நிலையில் வி. ஆனந்த நாகேஸ்வரன் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜன.31ஆம் தேதி வெளியாகிறது.

வி. ஆனந்த நாகேஸ்வரன், எழுத்தாளர், நூல் ஆசிரியர், ஆசிரியர் மற்றும் ஆலோசகராக பணிபுரிந்த அனுபவமிக்கவர். இவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள வணிகவியல் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

மேலும், ஆனந்த நாகேஸ்வரன் IFMR Graduate School of Business நிறுவனத்தின் தலைவராகவும் (டீன்) Krea Universityயில் பேராசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர் ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு தமிழ்நாட்டின் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் பதவி விலகல்!

Last Updated : Jan 29, 2022, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.