ஆக்ரா (உத்தரப் பிரதேசம்): கோவிட்-19 தாக்கத்தினால் தாஜ்மகால் செல்லும் பார்வையாளர்களின் அளவு 76% விழுக்காடு அளவு குறைந்திருக்கிறது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் 2020ஆம் ஆண்டின் பார்வையாளர்கள் வருகை கணக்கெடுப்பின் படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் வருகைப்பதிவைக் கொண்டு இந்தச் சரிவு கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது 7 லட்சத்து 37 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாஜ்மகாலைப் 2019ஆம் ஆண்டில் பார்வையிட்டுள்ளனர். இதுவே 2020இல் ஒரு லட்சத்து 82ஆயிரம் பேர் மட்டுமே வருகை தந்துள்ளனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பொறுத்தவரையில், 2019இல் 48 லட்சத்து 35 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். ஆனால் 2020இல் மொத்தம் 11 லட்சத்து 34 ஆயிரம் பேர் மட்டுமே பார்வையிட்டுள்ளனர்.
சாஸ்த்ரா 2021: ஐஐடி-யின் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சிக்கு பதிவுசெய்து விட்டீர்களா!
தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வைத்து நடைபெற்று வந்த தொழில்கள் அனைத்தும் தற்போது நலிவடைந்துள்ளதாக தெரிவிக்கும் அதனைச் சுற்றியுள்ள வியாபாரிகள், அரசு இதற்கு சரியான நடவடிக்கை மேற்கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வழிவகை செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.